கெஹலியவின் நியமனத்தை உடனடியாகவே நிராகரித்த கோட்டாபய
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella), மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் விஜித் குணசேகரவை(Dr. Vijith Gunasekara) மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவிக்கு பரிந்துரைத்துள்ள போதிலும் அதனை உடனடியாகவே நிராகரித்த அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச Gotabaya rajapaksha),அந்த இடத்திற்கு டொக்டர் சவின் சமகே (Dr. Savin Samege) என்பவரை நியமித்துள்ளார்.
சமேகே, இராணுவ மருத்துவமனையின் துணைப் பணிப்பாளராகவும், தடுப்பூசித் திட்டத்தின் பொறுப்பாளராகவும் உள்ளார்.
இதேவேளை, அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக டொக்டர் டி.எஸ்.சமரசிங்கவை(Dr. DS Samarasinghe) அரச தலைவர் நியமித்துள்ளார்.
அவர் அரச மருந்துப் பொருட்கள் வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சகத்தின் கொள்முதல் பிரிவில் பணியாற்றினார்.
பல்வேறு துறைகளின் தலைவர்களுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியதன் பின்னர் அரச தலைவர் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார் என தெரியவருகிறது.