யாழிலிருந்து சென்ற வேளை அனர்த்தம் : களனி பல்கலை உளவியல் துறை பீடாதிபதி விபத்தில் மரணம்
Sri Lanka Police
University of Kelaniya
Sri Lanka Police Investigation
By Sumithiran
மீரிகம - கண்டி மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில், களனிப் பல்கலைக்கழகத்தின்(kelaniya university) உளவியல் பீட தலைவரும், மூத்த விரிவுரையாளருமான வைத்தியர் என்.டி.குணேந்திர கயந்த உயிரிழந்துள்ளார்.
அத்துடன் மனைவி, மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் மீரிகம மருத்துவமனை காவல்துறையினர் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து சென்றவேளை துயரம்
கயந்தவும் அவரது குடும்பத்தினரும் யாழ்ப்பாணத்திலிருந்து(jaffna) வாடகைக்கு எடுக்கப்பட்ட வானில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்தை சந்தித்ததாக விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மீரிகமவிலிருந்து குருநாகல் நோக்கி சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள போயவாலன் அருகே சிமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தி, வான் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்