தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதிய இணைப்பு
காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாத்தறை நீதவான் அருண புத்ததாசவிற்கு முன் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரது பிணை கோரிக்கை குறித்த முடிவு நாளை வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.
முதலாம் இணைப்பு
காவல்துறை மா அதிபராக பணியாற்றிய தேசபந்து தென்னகோனுக்கு (Deshabandu Tennakoon) சொந்தமான ஹோகந்தரவில் உள்ள வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்கள (Criminal Investigation Department) அதிகாரிகளால் நேற்று (18) பிற்பகல் இவ்வாறு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்த சில சந்தேகத்திற்குரிய பொருட்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்து நீதிமன்றில் முன்னிலை
இதேவேளை, முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை (Deshabandu Tennakoon) தேடுவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலும் நான்கு விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசபந்துவை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையாலேயே குற்றப்புலனாய்வு திணைக்களம் இவ்வாறு விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளது.
இந்தநிலையில் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக இதுவரை அமைக்கப்பட்டுள்ள காவல்துறை குழுக்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்