அமெரிக்காவில் பல்கலைக்கழகத்திற்குள் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு!
அமெரிக்காவில் பல்கலைக்கழகமொன்றில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் கென்டக்கி மாகாணம் பிராங்க்போர்ட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விசாரணைகள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பல்கலைக்கழக வளாகத்துக்குள் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒரு மாணவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக பல்கலைக்கழகத்துக்கு விரைந்து துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
இதையடுத்து, படுகாயம் அடைந்த மாணவரை மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், துப்பாக்கி சூடு நடத்திய சந்தேக நபரிடம் காவல்துறையினர் விசாரணைகள் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |