கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் தடுப்பூசி -சவேந்திரசில்வா வெளியிட்ட தகவல்
kilinochchi
mullaithivu
shavendrasilva
garment factory
coronavaccine
By Sumithiran
கொழும்புக்கு வெளியே முதலீட்டு வலயங்களில் உள்ள ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதை இராணுவ மருத்துவப் படைப்பிரிவு தொடங்கியுள்ளதாக இராணுவத் தளபதி இன்று (25) தெரிவித்தார்.
அதன்படி, முல்லைத்தீவு, கிளிநொச்சி, கொக்கலா மற்றும் சீதாவாக்க முதலீட்டு வலயங்களில் உள்ள ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுவது நேற்று தொடங்கியுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.
எதிர்காலத்தில் கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தில் உள்ள ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று கூறினார்.
இந்த தடுப்பூசியின் நோக்கம் முதலீட்டு வலயங்களில் கொரோனா அபாயத்தைத் தடுப்பதாகும்.
தடுப்பூசி திட்டத்தை மேற்கொள்வதற்காக இலங்கை இராணுவ மருத்துவப் படைப்பிரிவின் பல குழுக்கள் நேற்று மேற்கண்ட பகுதிகளுக்கு சென்றன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி