இரவில் நடந்த அனர்த்தம்! சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த கிளிநொச்சி இளைஞன்
srilanka
kilnochsi
eath
By Vasanth
கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி - பரந்தன், முல்லைத்தீவு 35 வீதி முரசுமோட்டை பகுதியில் இரவு 11.45 மணி அளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
பரந்தன் பகுதியிலிருந்து சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த டிப்பர் வாகனம் மோதித்தள்ளியது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தர்மபுரம் பகுதியை சேர்ந்த ஞானசேகரம் நிதுசன் என்ற 20 வயதுடைய இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை டிப்பர் வாகனத்தின் சாரதி அந்த இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி