புலனாய்வாளர்களிடம் சிக்கிய நபர்களிடம் சந்தேகத்திற்கிடமான தொழில்நுட்பக் கருவிகள்!
தர்மபுரம் பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே வட்டக்கச்சி மாயவனனுர் பகுதியில் இவ்வாறு புதையல் தோண்ட முயற்சித்த சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் வட்டக்கச்சி மாயவனனுர் பகுதியில் புதைய தோண்ட முயற்சித்ததாக தெரிவித்து நேற்று இரவு இராணுவ புலனாய்வு பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டு தர்மபுரம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடமிருந்து சந்தேகத்திற்கிடமான தொழில்நுட்ப உபகரணங்களும் மீட்கப்பட்டு பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிடுகின்றனர். கைதான சந்தேக நபர்களில் ஒருவர் வவுனியா பகுதியை சேர்ந்தவர் எனவும், மற்றயவர் அம்பாறை பொத்துவில் பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிசார் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை மற்றுமொரு சந்தேக நபர் தப்பி ஓடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26