இரண்டு பிள்ளைகளுடன் பரிதவிக்கும் ஒரு குடும்பத்தின் அவலநிலை
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே வழிநடத்திச்செல்லப்படும் வாழ்க்கை மேடுபள்ளம் நிறைந்த வழிப்பாதையாகவே திகழ்கிறது.
இந்த குன்றும் குழியுமான பாதையில் சந்தோசம்,கொண்டாட்டம், இன்பம் என நல்ல போக்கு இருந்தாலும் சோகம், துன்பம்,துயரமும் சீண்டிப்பார்க்காமல் விட்டுவிடப்போவதில்லை.
இத்தனை பாடமும் சொல்லித்தரும் ஒருவர் வாழ்வில் சோகமே சவாலாக நிறைந்து நிற்கிறது.
எங்கிருந்தோ வந்த புயல் கூரை முதற்கொண்டு வீட்டை சூறையாடிச் சென்றதைப்போல் நன்றாக வாழ்ந்த குடும்பம் ஒரு சிறு விபத்தால் துவண்டு நிற்கிறது.
கணவனை இழந்து பரிதவிக்கும் இந்தக் குடும்பத் தலைவிக்கு பிள்ளைகள் இருவர், மோட்டார் சைக்கிளில் வழக்கம் போல் பணிக்குச் சென்ற கணவர் திடீரென்று இயந்திரம் தீப்பிடித்ததனால் காயமடைந்து 28 நாட்கள் சொல்லணாத் துயரங்களை அனுபவித்து குடும்பத்தை தனியே பரிதவிக்க விட்டு இவ்வுலகை விட்டு மேலுலகம் சென்றுவிட்டார்.
இரண்டு குழந்தைகளை கரை சேர்க்க இன்று வறுமையுடன் போராடிக்கொண்டிருக்கும் இந்த தாய் ரீகன் செல்வராணி.
ஒரு வேளை உணவுக்கும் கஷ்டப்படுகிறோம் என்று உருக்கமாக கூறும் அவர்கள் வேண்டி நிற்பது சொத்து சுகங்களை அல்ல, தங்கள் வாழ்வை வளம்பெற வைக்க ஒரு சிறு உதவி.
பாரதிபுரம் மத்தி, கிளிநொச்சியில் வாழும் இந்தக் குடும்பத்தின் துயர்நிறைந்த வாழ்க்கையினை ஐபிசி தமிழின் "என் இனமே என் சனமே" நிகழ்ச்சியின் காணொளி வாயிலாக கொண்டு வருகிறோம்.