இன்று அதிகாலை நடந்த கோரம்! ஒருவர் பலி
மட்டக்களப்பு - திராய்மடு புகையிரத தண்டவாளத்தில் தொடருந்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராய்மடு பிரதேசத்தைச் சேர்ந்த கந்தையா அசோக்குமார் (வயது - 43) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி அதிகாலை 5.45 மணிக்கு சென்ற தொடருந்துடன் மோதி உயிரிழந்துள்ளதாகவும் குறித்த நபர் மதுபோதையில் இருந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்