ஹிஸ்புல்லா அமைப்பிற்கு பேரிழப்பு : பிராந்திய தளபதியை கொன்றது இஸ்ரேல்
லெபனானின் தெற்கு பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் பிராந்திய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
ஒரு படைப்பிரிவின் தளபதிக்கு நிகரான பதவியில் இருக்கும் சலாமி, தெற்கு லெபனான் கிராமமான மஜடேலில் வாகனம் ஓட்டும் போது குறிவைக்கப்பட்டார்.
சலாமி கொல்லப்பட்டதை உறுதிப்படுத்திய ஹெஸ்புல்லா
சலாமி ஹிஸ்புல்லாவின் பிராந்திய தளபதியாக இருந்ததாகவும், வடக்கு இஸ்ரேலில் படையினர் மற்றும் இஸ்ரேலிய சமூகங்கள் மீதான தாக்குதல்களை மேற்பார்வையிட்டதாகவும் இஸ்ரேல் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
חיסול אחראי גזרת חג'יר בארגון הטרור חיזבאללה: כלי-טיס חיסל בדרום לבנון את אחראי גזרת חג'יר, המחבל חסן חסין סלאמי.
— Israeli Air Force (@IAFsite) February 26, 2024
סלאמי משתייך ליחידת נאצר בארגון הטרור חיזבאללה ופיקד על מספר מתווי טרור שבוצעו לעבר כוחות צה"ל, ולעבר יעדים אזרחיים וצבאיים בצפון הארץ. pic.twitter.com/23VnTgdUx5
சலாமி கொல்லப்பட்டதை ஹெஸ்புல்லா உறுதிப்படுத்திய அதேவேளை அவர் தளபதியா என்ற தரவரிசையை வெளியிடவில்லை
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |