சிறுமியுடன் பாலியல் உறவு! ஆண்ட்ரூவின் இளவரசர் பொறுப்பு மன்னர் சார்ள்ஸால் பறிப்பு
பிரித்தானியாவில் 100 ஆண்டுகளுக்கு பின்னர் இளவரசர் ஒருவரின் பொறுப்பு பறிக்கப்பட்ட சம்பவமாக ஆண்ட்ரூவின் இளவரசர் பொறுப்பு மன்னர் சார்ள்ஸால் பறிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
1917 இல் முதலாம் உலகப் போர்காலத்தில் ஜெர்மனிக்கு ஆதரவு வழங்கிய குற்றசாட்டில் விக்டோரியா மகாராணியின் பேரன்களில் ஒருவரான இளவரசர் சார்லஸ் எட்வர்ட்டிடம் இருந்த இளவரசர் பட்டம் நாடாளுமன்றத்தால் பறிக்கப்ட்ட பின்னர் இப்போது தனது சகோதரனான 65 வயதான ஆண்ட்ரூவின் இளவரசர் பொறுப்பை மன்னர் சார்ள்ஸ் பறித்துள்ளார்.
சிறாருடன் பாலியல் உறவுகொண்ட குற்றத்தில் அமெரிக்காவில் சிறையிடப்பட்ட பின்னர் அங்கு தற்கொலை சேர்ந்த பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கும் அன்ருவுக்கும் இடையிலா தொடர்புகள் இருந்தன.
இதே ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் நட்பு இருந்தது.
அரண்மனையும் இழப்பு
ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கும் அன்ருவுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து பல வாரங்களாக நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளின் பின்னர், ஆண்ட்ரூ தனது இளவரசர் பட்டத்தையும் தனது அரண்மனை வதிவிடமான விண்ட்சர் மாளிகையும் இழந்துள்ளார்.

Image Credit: People.com
கடந்த ஏப்ரலில் ஒஸ்ரேலியாவில் தனது 41 வது வயதில் தற்கொலை செய்துகொண்ட 3 பிள்ளைகளின் அன்னையான வேர்ஜீனியா கியூஃப்ரே, என்ற பெண் தான் பதின்மவயது பெண்ணாக இருக்கும் போது இளவரசர் ஆண்ட்ரூ மூன்று வெவ்வேறான சந்தர்ப்பங்களில் தன்னுடன் உடலுறவு கொண்டதாகக் தான் உயிருடன் இருந்தகாலத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.
ஆனால் ஆண்ட்ரூ அதனை பலமுறை மறுத்திருந்தாலும் வேர்ஜீனியா கியுப்ரேயின் தற்கொலைக்குப் பின்னர் இந்தவிடயம் தீவிரமடைந்தது.
அந்தவகையில், இந்தமாதம் வெளியான 2011 ஆம் ஆண்டு மின்னஞ்சல்களில் ஆண்ட்ரூ எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருப்பது ஆதாரப்பட்டதும் இது குறித்து நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளின் பின்னர், ஆண்ட்ரூ தனது இளவரசர் பட்டத்தையும் தனது அரண்மனை வதிவிடமான விண்ட்சர் மாளிகையும் இழக்கின்றார்.
இளவரசர் பொறுப்பு
இனிமேல் ஆண்ட்ரூ இளவரசர் என அழைக்கப்படமாட்டார் மாறாக வெறுமனவே மவுண்ட்பேட்டன் வின்ட்சர் என மட்டும் அவர் விளிப்படுவார் என பக்கிங்காம் மாளிகை அறிவித்துள்ளது.

Image Credit: The Wall Street Journal
ஆண்ட்ரூ இந்த மாத ஆரம்பத்தில் யோர்க் டியூக் உட்பட தனது ஏனைய அரச பட்டங்களை கைவிட்ட நிலையில் இப்போது இளவரசர் பொறுப்பும் இழக்கப்பட்டுள்ளது.
விண்ட்சர் மாளிகையில் இருந்து வெளியேறும் அனட்ரு இனிமேல் சண்ட்ரிங்ஹாமில் உள்ள தனியார் தங்குமிடத்தில் வசிக்கவுள்ளார். இதற்குரிய செலவீனத்தை மன்னர் சார்லஸ் தனிப்பட்ட முறையில் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆண்ட்ரூவின் இளவரசர் பட்டம் பறிக்கப்பட்டாலும் அவரது புதல்விகளான யூஜெனி மற்றும் பீட்ரைஸ்க்குரிய இளவரசிகள் பட்டம் இருக்கும் எனவும் அறிவிக்கப்ட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        