முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியை பார்வையிட்ட ஐ. நா பிரதிநிதி
ஐக்கிய நாடுகள் சபையின்(UN) இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் (Marc-André Franche) முல்லைத்தீவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
பல்வேறு இடங்களுக்கும் இன்று(6) விஜயம் செய்த அவர்,கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியையும் இன்று காலை அவர் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதி நிதி உள்ளிட்ட குழுவினர் முல்லைத்தீவு(Mullaitivu) மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி மற்றும் சட்டத்தரணி க.கனேஸ்வரன் ஆகியோரிடம் குறித்த புதைகுழி விவகாரங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி
இதேவேளை,வடக்கு மாகாணத்தின் பொருளாதாரம், கல்வி, விவசாயம், தொழிற்துறை ஊக்குவிப்பு, காணி விடுவிப்பு, கண்ணிவெடி அகற்றும் பணி, மீள்குடியேற்றம், இயற்கை வளங்கள், முதலீட்டு திட்டங்கள், முன்னுரிமை படுத்தப்பட வேண்டிய செயற்பாடுகள், பாதுகாப்பு துறையினரின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் நேற்று (05) ஐக்கிய நாடுகளின் சிறிலங்காவிற்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் (Marc - Andre Franche ) உள்ளிட்ட குழுவினருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிற்கும் (B.S.M. Charles) இடையில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |