சர்ச்சைகளின்றி சமரசமாக முடிந்த கோப்பாய் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
கோப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் (Jeyachandramoorthy Rajeevan ) தலைமையில் நடைபெற்றது.
கோப்பாய் பிரதேச செயலகத்தில் (Divisional Secretariat - Kopay) இன்று (26) காலை குறித்த கூட்டம் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna), ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், பிரதேச செயலாளர், மற்றும் துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள்
மேலும் வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, விவசாயம், கல்வி, நீர்ப்பாசனம் சம்பந்தமான வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
நடைபெற்று முடிந்த நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மற்றும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் என்பவற்றுடன் ஒப்பிடுகையில் கோப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அமைதியான முறையிலே நடைபெற்றது.
இதேவேளை முக்கியமான விடயங்களை நீங்கள் முன்வைப்பதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அர்ச்சுனாவை நோக்கி ரஜீவன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 4 நாட்கள் முன்
