கொத்து பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பொருட்களின் விலைகள் அதிகரித்ததை அடுத்து உணவகங்களும் தமது விலைகளை விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்தன.
இவ்வாறு எல்லா வகையிலும் விலைகள் அதிகரித்ததால் அன்றாட கூலித் தொழிலாளிகள் உட்பட பலரும் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டனர்.
தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சற்று குறைவடைந்துள்ள நிலையில் உணவகங்களும் ஏற்றிய விலையில் சற்று குறைப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன.
கொத்து மற்றும் சிற்றுண்டி வகைகளின் விலைகள்
இதன்படி கொத்து றொட்டி மற்றும் சிற்றுண்டி வகைகளின் விலைகளை பத்து ரூபாவால் குறைக்கவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
எனினும் “நாட்டில் விலைகளைக் கட்டுப்படுத்தும் பொறிமுறை இல்லாததால், உணவக உரிமையாளர்களிடம் பேசி விலைகளை குறைப்பது நுகர்வோரின் பொறுப்பாகும்," என்று அவர் மேலும் கூறினார்.

