குமார ஜயக்கொடி ஊரிலேயே பெரிய திருடனாம் : முன்னாள் அமைச்சர் கிண்டல்
Prasanna Ranaweera
Kumara Jayakody
NPP Government
By Jaso
அனுர அரசின் எரிசக்தி அமைச்சராக இருந்து தற்போது பதவி விலகிய குமார ஜயக்கொடி தனது சொந்த ஊரிலேயே ஒரு பெரிய திருடன் என்று முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.
முன்னர் அனுர குமார திசாநாயக்க, குமார ஜயக்க்கொடியை உரக் கூட்டுத்தாபனத்தில் நியமித்து அதன் ஒப்பந்தப்புள்ளிகளில் திருடினார் என்றும், இப்பொழுது அவர் நிலக்கரி மற்றும் எண்ணெயில் திருடியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பதவிகளில் இருந்து விலகுவதால் மோசடிகளிலிருந்து விடுபட முடியாது
அமைச்சர் பதவிகளில் இருந்து விலகுவதால் மட்டும் அந்த மோசடிகளிலிருந்து விடுபட முடியாது என்று பிரசன்ன ரணவீர மேலும் தெரிவித்தார்.

தரமற்ற நிலக்கரி கொள்வனவு தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து அந்த விசாரணை நீதியான முறையில் நடைபெறுவதற்காக எரிசக்தி அமைச்சு பதவியிலிருந்து குமார ஜயக்கொடி விலகியதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
2ம் ஆண்டு நினைவஞ்சலி