குருந்தூர்மலையில் குழப்பத்தை தூண்டியவர் குறித்து காவல்துறையினர் வெளியிட்ட தகவல்
முல்லைதீவு குருந்தூர்மலையில் குழப்பத்தை தூண்டியவர் குறித்து எந்த வித முறைப்பாடுகளும் இதுவரையில் இல்லாததால் இது தொடர்பில் எவரையும் கைதுசெய்ய முடியாத நிலையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து உருவாகும் குழப்பநிலைக்கு காரணமான நபரை புலனாய்வு பிரிவினர் அடையாளம் கண்டுள்ளனர் என தெரிவித்தார்.
இது குறித்து கேள்வி எழுப்பியவேளை, ''இது தொடர்பில் எந்த முறைப்பாடும் முன்வைக்கப்படவில்லை. எனவே நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
அரசியல் தலையீடுகள்

விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு முறைப்பாடுகள் அவசியம், முறைப்பாடுகள் இல்லாமல்
விசாரணைகளை
முன்னெடுக்கவோ, கைதுசெய்யவோ முடியாது.
எனினும் குருந்தூர் மலையை சுற்றியுள்ள
பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து அரசியல் தலையீடுகள் இல்லாமல் விசாரணைகள் இடம்பெறுகின்றன.”என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.