குருந்தூர் மலை விவகாரம் - தொல்பொருள் திணைக்களம் வழங்கிய உறுதிமொழி

Mullaitivu Hinduism Buddhism
By Vanan Aug 08, 2023 01:09 PM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் பொங்கல் நிகழ்வுக்கு பாதகமாக நடக்கமாட்டோம் என தொல்பொருள் திணைக்களத்தினால் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது.

குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி அமைக்கப்பட்ட சட்டவிரோத விகாரை கட்டுமானம் தொடர்பில் இடம்பெறும் வழக்கு விசாரணையில் அண்மையில் இடம்பெற்ற பொங்கல் வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் விதமான சம்பவம் தொடர்பாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனால் முல்லைத்தீவு காவல்துறையில் முறைப்பாடு செய்த நிலையில் குறித்த விடயமாக இருந்த வழக்கு நகர்த்தல் பத்திரம் அணைத்து இடம்பெற்றுக்கொண்டிருந்த வழக்கு விசாரணை இன்றையதினம் (08) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

வழக்கு விசாரணைகளின் பின்னர் சட்டத்தரணி தனஞ்சயன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,

தொல்பொருள் திணைக்களத்தின் நிலைப்பாடு 

குருந்தூர் மலை விவகாரம் - தொல்பொருள் திணைக்களம் வழங்கிய உறுதிமொழி | Kurunthur Malai Issue Court Update

"குருந்தூர்மலை வழக்கானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

கடந்த தவணையிலே பொங்கல் உற்சவம் ஒன்றினை ஆதி ஐயனார் ஆலயத்திலே செய்ய முற்பட்ட வேளை தொல்லியல் திணைக்களத்தினாலும், சகோதர மொழி பேசுபவர்களாலும் தடுக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது. அது தொடர்பாக நகர்த்தல் பத்திரம் ஊடாக அந்த விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு நாங்கள் கொண்டுவந்தோம். 

அது தொடர்பாக பதிலளிப்பதற்காக தொல்லியல் திணைக்களத்திற்கு தவணை வழங்கப்பட்டிருந்தது.

இன்றையதினம் தொல்லியல் திணைக்களம், சட்டமாஅதிபர் திணைக்களத்தினுடைய அரச சட்டத்தரணி ஊடாக தோன்றியிருந்தார்கள்.

இன்றைய தினம் தாம் எந்த விதத்திலும் அங்கே சைவ மக்கள் பொங்கல் பொங்கி வழிபடதடை செய்யவில்லை என்றும், எதிர்காலத்திலும் அவ்வாறான பொங்கல் நிகழ்வு நடைபெற்றால் அதற்கு பாதகமாக நடக்க மாட்டோம் என்றும் இன்றைய தினம் குறிப்பிட்டிருந்தார்கள்.

இன்றையதினம் ஆலய பரிபாலனசபை மக்கள் சார்பாகவும், ஊர்மக்கள் சார்பாகவும், முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் பலரும், அதிபர் சட்டத்தரணிகள் உள்ளடங்கலாக பல சிரேஷ்ட சட்டத்தரணிகள் ஆதிசிவன் ஐயனார் ஆலயம் சார்பாக இந்த வழக்கில் தோன்றியிருந்தார்கள்.

இது தொடர்பான மேலதிக கட்டளைக்காக இந்த வழக்கானது எதிர்வரும் 31.08.2023 க்கு நியமிக்கப்பட்டிருக்கின்றது" என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025