ட்ரம்ப்பின் எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கையான வெளிநாடு!
பிராந்திய நிலைமைகளை கருத்தில் கொண்டு, குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை வீட்டிலேயே இருக்குமாறு குவைத்தின் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்போது, புதன்கிழமை நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை வீடுகளிலேயே தங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ட்ரம்பின் எச்சரிக்கை
அமைச்சகத்தின் அறிக்கையில், “இந்த நடவடிக்கை பாதுகாப்பை உறுதி செய்யவும், பாதுகாப்பு செயல்பாடுகளை ஆதரிக்கவும், நாட்டில் நிலைத்தன்மையை பேணவும் மேற்கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்ததன் பின்னணியில் வெளியாகியுள்ளது.
அவர், ஈரான் உடனடி ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும், செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி ஹோர்மோஸ் நீரிணை திறக்கப்பட வேண்டும் என்றும் காலக்கெடு நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |