தமிழரசு கட்சியின் உழைப்பாளர் தின நிகழ்வு! (படங்கள்)
இலங்கை தமிழ் அரசு கட்சியின் கிழக்கு மாகாண உழைப்பாளர் தின நிகழ்வு இன்று மட்டக்களப்பு களுவண்கேனி பத்தினி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் உள்ளிட்ட உறுப்பிர்களும், மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அரியநேந்திரன் மற்றும் சிறிநேசன் தமிழரசு கட்சியின் முன்னாள் செயலாளர் துரைராஜசிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வில் முதலில் இந்து கிறிஸ்தவ மத குருமார்களினால் மங்கள விளக்குகேற்றப்பட்டு பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு விளக்கேற்றினர்.
மீனவர்களின் கோரிக்கை பிரகடனம்
அதன் பின்னர் வரவேற்பு நடனம் இடம்பெற்றது, நடனமாடிய மாணவர்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் பரிசில்கள் வழங்கி வைத்தார்.
பின்னர் மீனவர்கள் சங்கங்கள் சார்பாக மீனவர்களின் பிரச்சினையை மீனவர்களின் கோரிக்கை பிரகடனம் வாசிக்கப்பட்டது.
அதன் பின்னர் கவியரங்கு நடைபெற்றது. இதில் சிறிநேசன் அரியநேந்திரன் துரைராஜசிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.





