யாழில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த மற்றுமொரு காணி விடுவிப்பு
யாழில் (Jaffna) 30 வருடத்திற்கு மேலாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணியொன்று விடுவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - அச்சுவேலி நவக்கிரி சித்த மருத்துவமனைக்கு சொந்தமான 02 ஏக்கர் காணியே இன்றைய தினம் (10.04.2025) இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.
சித்த மருத்துவமனைக்கு தேவையான மூலிகைகளை பயிரிடும் காணியாக குறித்த காணி காணப்பட்ட நிலையில் 1996ஆம் ஆண்டு இராணுவத்தினர் காணியை கையகப்படுத்தி கடந்த 30 ஆண்டு காலமாக நிலை கொண்டிருந்தனர்.
கையளிக்கப்பட்ட காணி
இந்நிலையிலேயே குறித்த காணி உத்தியோகபூர்வமாக இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் - அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமை காரியாலய கட்டடம் மற்றும் அதனை சூழவிருந்த சுமார் 08 பரப்பு காணியும் இன்றைய தினம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 30 வருட காலத்திற்கு மேலாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த காணி மற்றும் அதனுள் இருந்த கட்டடம் என்பவற்றை வலி கிழக்கு பிரதேச செயலாளரிடம் இராணுவத்தினர் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
