காணி பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் : தினேஷ் குணவர்தன வலியுறுத்தல்
                                    
                    Vavuniya
                
                                                
                    Dinesh Gunawardena
                
                                                
                    Prime minister
                
                                                
                    Sri Lanka
                
                        
        
            
                
                By Eunice Ruth
            
            
                
                
            
        
    காணிகளின் உரிமை மற்றும் ஏனைய காணி பிரச்சனைகள் தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தை சிறிலங்கா பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.
புதிய கிராமம் – புதிய நாடு தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற வவுனியா மாவட்ட உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்து உரையாற்றும் போதே, அவர் இதனை கூறியுள்ளார்.
விவசாயிகளுக்கும் பயிர்ச்செய்கைக்கும் உதவும் வகையில் காணிப்பிரச்சனைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களையும் மேம்படுத்தி விரைவான அபிவிருத்திக்கு இட்டுச்செல்ல தொழில்நுட்ப உதவி மற்றும் இயந்திரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தினேஷ் குணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 
    
                                
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        