ஈஸ்டர் குண்டுதாக்குலுக்கு நான்கு நாட்கள் முன்பு சகரானின் நண்பர் வாங்கிய மர்மக் காணி!!

By Niraj David Oct 07, 2021 01:48 PM GMT
Report

 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி இலங்கையை மாத்திரமல்ல, உலகையே உலுக்கிப்போட்ட ஈஸ்டர் குண்டுதாக்குதல்கள் இலங்கையில் கிழக்கு மாகாணமான மட்டக்களப்பிலேயே திட்டமிடப்பட்டது என்பதும், மட்டக்களப்பைச் சேர்ந்த பல முஸ்லிம்களே அதில் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்பதும் யாவரும் அறிந்த விடயம்.

அந்த ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடைபெறுவதற்கு சரியாக நான்கு நாட்களுக்கு முன்னர் - அதாவது, 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் திகதி மட்டக்களப்பில் வாங்கப்பட்ட ஒரு காணி தற்பொழுது மீண்டும் பேசு பொருளாகியுள்ளது.

இலங்கையில் மீண்டும் தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெறலாம் என்று அரசதரப்பில் இருந்து அடிக்கடி எச்சரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில்,  தற்பொழுது பேசுபொருளாகிவருகின்ற இந்த காணி பற்றிய தகவல்களை வெளிக்கொணருவது முக்கியம் என்றே நினைக்கின்றோம்.

கடந்த இரண்டு தசாப்த காலமாக, மட்டக்களப்பு, பொலனறுவை, மற்றும் அம்பாறை மாவட்டங்களில் ‘கிழக்கிஸ்தான்’ என்ற தனி இஸ்லாமிய இராட்சியத்திற்காக என்று கூறி பல ஆயிரம் ஏக்கர் அரச மற்றும் தனியார் காணிகள் அரபு நாடுகளின் நிதியுதவியுடன் சட்டவிரோத ஆவணங்களை தயாரித்து கொள்வனவு செய்யப்பட்டு வந்தன.

குறிப்பாக காத்தான்குடி, ஏறாவூர், ரிவதென்னை போன்ற இடங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் ஜீகாதிகளின் பயிற்சிகளுக்கென்று வாங்கிக் குவிக்கப்பட்டிருந்தன.

குறித்த சட்டவிரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்த முயற்சித்த மட்டக்களப்பு மாவட்ட காணி ஆணையாளர் அவரது வீட்டில் வைத்து இனந் தெரியாத நபர்களினால் சுடப்பட்டார்.

இந்த விடயம் தொடர்பாக பேசிய, செயற்பட்ட பல அரச அதிகாரிகள் அந்த நேரத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இருந்த அரசியல் செல்வாக்கைப் பாவித்து இம்மாற்றம் செய்யப்பட்டார்கள் அல்லது மிரட்டி மௌனிக்கவைக்கப்பட்டார்கள்.

அந்த வரிசையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள புன்னக்குடா கடற்கரையை அண்டிய பகுதியில் 19.04.2019 இல் 39 ஏக்கர் காணியொன்று கொள்வனவு செய்யப்பட்டது.

அதாவது தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் நடைபெறுவதற்கு சரியாக நான்கு நாட்களுக்கு முன்னர் இந்த கணிப் பதிவு நடைபெற்றது.

சகரானின் சகா என்று கூறப்படுகின்ற காத்தான்குடியைச் சேர்ந்த முகமது பதுருதீன் முகைதீன் (அடையாள அட்டை இல: 750683126V) என்பவர் பெயரில்தான் அந்த 39 ஏக்கர் காணி கொள்வனவு செய்யப்பட்டது.

முகமது பதுருதீன் முகைதீன் என்பவரை ஆமி முகைதீன் என்றும் அழைப்பார்கள்.

1990ம் ஆண்டு காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தில் இணைந்து அதனது புலனாய்வுப் பிரிவான Directorate of Military Intelligenceஇல் பணியாற்றியவர் இவர்.

பின்னர் ராணுவத்தை விட்டு விலகி இலத்திரனியல் உபகரனங்கள் திருத்தும் வேலைகளைச் செய்தபடி 'சகரான்' குழுவில் இணைந்து செயற்பட்டு வந்தார்.

சகரானின் நம்பிக்கைக்குரியவராக இவர் செயற்பட்டதாக காத்தான்குடித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவராலேயே சகரானின் சகாக்களுக்கு ஆயுதப் பயறிசியும், உடற்பயிற்சியும் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

ஒரு சந்தர்ப்பத்தில் காத்தான்குடி அலியார் சந்தியில் ‘சுன்னத்துல் ஜமாஆத்’ கொள்கையைப் பின்பற்றும் குழுவினர் மீது வாளால் வெட்னார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் முகமது பதுருதீன் முகைதீன் என்ற ஆமி முகைதீன் மீதும், சகரான் மீதும் காவல்துறையினர் குற்றச்சாட்டுக்களைப் பதிவுசெய்தபோதிலும், இவர்கள் இருவருமே கைதுசெய்யப்படவில்லை.

இவர்கள் இருவதும் கைதுசெய்யப்படாமல் தேடும் நபர்களாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருந்தார்கள்.

நீதிமன்றத்தால் தேடும் நபராக இவர் இருந்த நிலையில்தான் அந்த 39 ஏக்கர் காணியை வாங்கியும் இருந்தார்.

2019.04.21 இல் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் சகரானின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்டது உறுதியானதைத் தொர்ந்துதான் 'ஆமி மொகைதீன்' என்ற முகமது பதுருதீன் முகைதீன் சிறிலங்கா குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் தடுத்துவைக்கப்பட்டார்.

சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்த முகமது பதுருதீன் முகைதீன் - அதாவது ஆமி முகதீனிடம், ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்கு 4 நாட்களுக்கு முன்பாக அவரால் கொள்வனவு செய்யப்பட்ட காணி பற்றி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டனவா என்பது தெரியவில்லை.

சுமார் 5 கோடி ரூபாய் பெறுமதியானதாக நம்பப்படுகின்ற அந்த 39 ஏக்கர் காணியை வாங்கியதற்கான பணம் சகராணுக்கு எப்படிக் கிடைத்தது என்றோ, காடு மற்றும் கடல் சார்ந்த அந்த 39 ஏக்கர் காணி என்ன நோக்கத்திற்காக வாங்கப்பட்டது என்றோ விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டனவா என்றும் தெரியவில்லை.

தீவிரவாத நோக்கத்திற்காக கொள்வனவுசெய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்ற அந்தக் காணியும் அரசாங்கத்தால் இதுவரை கையகப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு நோக்கத்தக்கது.

இது இவ்வாறு இருக்க, புன்னைக்குடா பிரதேசத்தில் உள்ள இந்தக் காணிகக்கு செல்வதற்கான பாதைகள்  தனியாரால் அமைக்கப்பட்டுவருவதாக அங்கு வாழும் தமிழ் மக்கள் குற்றம் சுமத்துகின்றார்கள்.

கடந்த சில நாட்களாக புன்னைக்குடா பிரதேசத்தில் அரச காணிகளை ஊடறுத்து 'கிரவல்' வீதிகள் அமைக்கப்பட்டுவருவதாகவும், அந்தப் பாதை அமைப்பில் சில முஸ்லிம் இளைஞர்கள் ஈடுபட்டு வருவதாகவும் மக்கள் அச்சம வெளியிட்டுள்ளார்கள். 

இதுவரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு கிரவல் வீதி அமைக்கப்பட்டுவிட்டதாகவும், இது குறித்து ஏறாவூர் பற்று பிரதேச சபையோ அல்லது காவல்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கின்றார்கள் அப்பிரதேச மக்கள்.

சகரானின் தீவிரவாதத்தின் விளைவை அனுபவித்து இரண்டு வருடங்களே ஆகியுள்ள நிலையில், அந்த தீவிரவாதத்திற்கென்றே கொள்வனவு செய்யப்பட் காணியை மீண்டும் பாவணைக்குள்ளாக்கும் தேவை ஏன் ஏற்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்புகின்றார்கள் அந்தப் பிரதேச வாழ் மக்கள்.

தமிழ் முஸ்லிம் இனவிரோதத்திற்கு வித்திடக்கூடியதும், சமூகங்களுக்கு இடையிலான கலவரங்களைத் தோற்றுவிக்கக்கூடியதுமான இந்த விடயம் சம்பந்தமான மேலதிக தகவல்களும், பொதுமக்களின் கருத்துக்களும் விரைவில் இந்த தளத்தில் பதிவிடப்படும். 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025