பூமியில் புதையும் சீன நகரங்கள்: வெளியானது எச்சரிக்கை
சீனாவில் (China) உள்ள நகரங்கள் படிப்படியாக பூமியில் புதைந்து வருவதாக ஆராய்ச்சி ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த விடயமானது, சீனாவில் 50 இற்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவின் முக்கிய நகரங்களில் சுமார் அரைவாசிக்கும் அதிகமான நகரங்களில் இந்த பிரச்சினை இருந்து வருகிறதாக தெரிவிக்கப்படுகிறது.
எச்சரிக்கை
இதற்கு பிரதானமான காரணமாக சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்குக் கடந்த சில தலைமுறைகளாகவே அங்கு நடந்த கட்டுமானங்கள் என கூறப்படுகிறது.
அதேவேளை, அதிகமாக நிலத்தடி நீரினை உரிஞ்சி எடுப்பதாலும் இந்த பிரச்சினை ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் 45% நகரங்கள் ஆண்டுக்கு 0.1 அங்குலம் என்ற அளவில் மண்ணில் புதைந்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால், கோடிக்கணக்கிலான மக்கள் பாதிப்படையக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |