யாழில் அநுர ஆட்சியில் விடுவிக்கப்படவுள்ள இராணுவ வசமான காணிகள்!
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலம் நிறைவடைய முன் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் சம்பத் துயகொந்த (Sampath Thuyacontha) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை இன்று (28) மேற்கொண்டிருந்த அவர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது, ஊடகவியலாளர்களால் எழுப்பபட்ட கேள்விகளுக்கு பின்வருமாறு பாதுகாப்பு செயலாளர் பதில் வழங்கியுள்ளார்.
இறுதி முடிவு
கேள்வி - யாழ்.மாவட்டத்தில் 2700 ஏக்கர் காணிகளே விடுவிக்கப்பட வேண்டி உள்ளது விடுவிக்கபடுமா ?
பாதுகாப்பு செயலாளரின் பதில் - காணவிடுவிப்பு தொடர்பில் நாம் சிந்தித்து வருகின்றோம். எதிர்காலத்தில் நாங்கள் சரியான மதிப்பீட்டை செய்வோம், அது குறித்து முடிவு செய்வோம் .
கேள்வி - தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஐந்து அல்லது ஆறு வருடங்களே அதன் கால எல்லையாக உள்ளது, குறித்த காலத்தில் மக்களின் நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்படுமா ?
பதில் - “ஆம் அதனை தான் நான் கூறுகின்றேன்.நாங்கள் மீண்டும் காணி விடுவிப்பு தொடர்பில் மதிப்பீடு செய்துள்ளோம், பாதுகாப்பு மற்றும் ஏனயை காரணங்களின் அடிப்படையில் நாம் சில முடிவுகளை எடுத்துள்ளோம்.
நிச்சயமாக நேர்மறையாக இந்த விடயத்தில் ஈடுபடுவோம், ஏற்கனவே சில வீதிகளை நாம் விடுவித்துள்ளோம்.அத்துடன் இந்த நாட்டு மக்களின் நலன் குறித்து நாம் எப்பொழுதும் கரிசனையுடையவர்களாகவே உள்ளோம்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |