9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு இன்றிரவு (22) 8 மணிவரையில் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
இதன்படி, பதுளை, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, கம்பஹா, குருநாகல், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பதுளை மாவட்டத்தின் ஒஹியவிற்கும் இந்தல்கஸ்ஹின்னவிற்கும் இடையில் தொடருந்து தண்டவாளத்தில் மண் மேடு சரிந்து வீழ்ந்தமையினால் மலையக பகுதிக்கான தொடருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
அத்துடன் கண்டி மாவட்டத்தின் பேராதனை நகரில் உள்ள பாலத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
