கேகாலையில் மண்சரிவிற்குள் சிக்கி மாயமான தந்தையும் மகனும்- தற்போது வெளியாகியுள்ள தகவல்!
death
kegalle
sri Lanka
flooding
By Kalaimathy
கேகாலையில் மண்சரிவில் சிக்கி மாயமான தந்தையும் மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவிற்குள் வீடொன்று சிக்கியதில், அவ்வீட்டில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் காணாமல் போயிருந்தனர்.
இந்நிலையிலேயே தந்தை மற்றும் மகன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அவர்களின் தாய் இன்று காலை உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையையடுத்தே 70 வயதுடைய தந்தை மற்றும் 32 வயதுடைய மகன் ஆகியோரின் சடலங்கள் இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளன.