நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
நிலவும் சீரற்ற காலநிலை காரமணாக நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பதுளை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
தொடருந்து போக்குவரத்து
அத்துடன், ஹாலிஎல – உடுவர தொடருந்து நிலையங்களுக்கு இடையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மலையக தொடருந்து போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், குறித்த மண்மேட்டினை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
மழை பெய்யும் சாத்தியம்
இதேவேளை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இரவு வேளைகளில் மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும்.
மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் பலத்த காற்றும் வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்