வெளிநாடொன்றில் அசத்தும் இலங்கை பெண்(காணொளி)
லெபனானில் உள்ள இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளியான பெண் ஒருவர் சமையல் பட்டறையான ‘எல்லைகளற்ற சுவைகள்’ தொடரில் இடம்பெற்றுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த அன்னா பெர்னாண்டோ லெபனானில் ஒரு சமையல் பட்டறையை நடத்திவருகிறார். அந்த பட்டறையில் பல்வேறு நாடுகளில் இருந்து வருவோர் உணவை சமைத்து சாப்பிடுகிறார்கள்.
சமையல் திறமை
தனது சமையல் திறமையை வெளிப்படுத்திய பெர்னாண்டோ, பங்கேற்பாளர்களுக்கு தனது சொந்த நாட்டிலிருந்து (இலங்கை) உணவுகளை தயாரிக்கக் கற்றுக் கொடுப்பதன் மூலம் இலங்கை உணவு வகைகளை பிரபலப்படுத்தி வருகிறார்.

இது தொடர்பில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட பெர்னாண்டோ, ஒவ்வொரு புலம்பெயர்ந்த தொழிலாளிக்கும் ஒரு திறமை இருக்கிறது, அதை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும் என்றும், சமைப்பதே தனது திறமை என்றும், குறிப்பாக லெபனானில் அதை வெளிப்படுத்த விரும்புவதாகவும் கூறினார்.
2021 பெய்ரூட் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, சமூக மையமாக மாற்றப்பட்ட கைவிடப்பட்ட காரொன்றில் பட்டறை நடத்தப்படுகிறது.அங்கு இப்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களின் பங்கேற்புடன் சமையல் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
Sri Lankan migrant worker Anna Fernando hosts a cooking workshop in Lebanon as part of a ‘Flavors without Borders’ series where participants cook and eat food from different countries pic.twitter.com/WtNI1t8gMr
— Reuters (@Reuters) September 21, 2023