யாழ். வடமராடசியில் பெருமளவு போதைப்பொருள் மீட்பு
யாழ்ப்பாணம் - வடமராட்சியில் பெருந்தொகையான கேரளா கஞ்சா விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் இன்றைய தினம் (14) அதிகாலை 3 மணியளவில் குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இன்றைய தினம் துன்னாலை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நாகர்கோவில் பகுதியில் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
தேடுதல் நடவடிக்கை
இதன் போது 14 kg எடையுள்ள ஒன்பது பொதிகள் அடங்கிய கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மீட்கப்பட்ட கேரளா கஞ்சா மேலதிக விசாரணைகளுக்கு மருதங்கேணி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
மேலதிக விசாரணைகளையும் சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகளையும் மருதங்கேணி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |