லசந்த விக்கிரமசேகர படுகொலை: மூவருக்கு விளக்கமறியல்
வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூவர் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று (28.10.2025) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, லசந்த விக்ரமசேகர கொலையின் துப்பாக்கிதாரிக்கு மோட்டார் சைக்கிளை வழங்கியவர், அந்த மோட்டார் சைக்கிளை பழுது பார்த்தவர் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஆகிய மூவரும் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
லசந்த விக்ரமசேகர கொலை
அண்மையில், வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர , பிரதேச சபையில் வைத்து சுட்டுக் கொலை செய்யபட்டார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து விசேட சோதனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தனர்.
குறித்த சோதனை நடவடிக்கையின் போது துப்பாக்கிதாரி உள்ளிட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தற்போது சந்தேகநபர்கள் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்