அர்ச்சுனா எம்.பியிடம் சட்டவிரோத துப்பாக்கி - அம்பலப்படுத்தும் சட்டத்தரணி

Jaffna Gajendrakumar Ponnambalam Seeman India Ramanathan Archchuna
By Kajinthan May 23, 2026 02:36 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட துப்பாக்கியானது நீதிமன்றத்தால் மீளப் பெறப்பட்டு வழக்கு இடம்பெற்று வருகின்ற நிலையில் அவரிடம் மேலும் ஒரு சட்டவிரோத துப்பாக்கி இருக்கிறது என சட்டத்தரணி உமாகரன் இராசையா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தமிழக அரசியல் கட்சியின் தலைவர் சீமானை அச்சுறுத்தும் வகையில் அல்லது கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

விளம்பரத்திற்காக நஞ்சாக்கப்படும் தமிழ் தேசியம்...! காழ்ப்புணர்ச்சி அரசியலைத் தோலுரிக்கும் கருணாநிதி

விளம்பரத்திற்காக நஞ்சாக்கப்படும் தமிழ் தேசியம்...! காழ்ப்புணர்ச்சி அரசியலைத் தோலுரிக்கும் கருணாநிதி

துப்பாக்கி காட்டி உயிரச்சுறுத்தல்

அதாவது இந்தியாவுக்கு வரும்போது துப்பாக்கி எடுத்து வர முடியுமாக இருந்திருந்தால் அவரை சுட்டுக் கொலை செய்திருப்பார் என்றும், அல்லது யாழ்ப்பாணத்துக்கு சீமான் வந்தால் அவரை சுட்டுக் கொலை செய்வதாகவும் கூறியுள்ளார்.

அர்ச்சுனா எம்.பியிடம் சட்டவிரோத துப்பாக்கி - அம்பலப்படுத்தும் சட்டத்தரணி | Lawyer Exposes Illegal Gun Belongs To Aruchuna Mp

காணிப் பிரச்சினை ஒன்றில் பெண்ணொருவரிடம் துப்பாக்கி காட்டி உயிரச்சுறுத்தல் விடுத்த நிலையில் அவருக்கு வழங்கிய உத்தியோகபூர்வ துப்பாக்கியானது நீதிமன்றத்தினால் கைப்பற்றப்பட்டு சான்றுப் பொருளாக்கப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் அர்ச்சுனாவின் கருத்தின் அடிப்படையில் நோக்குவோமேயானால் அவரிடம் மேலும் சட்டவிரோத துப்பாக்கி இருக்கிறது என்று அர்த்தப்படுகிறது.

இந்த அரசின் காலத்தில் பிழையான ஆயுத கலாசாரத்தை உருவாக்குகின்ற நபராக இவர் இருக்கிறாரா என்ற கேள்வி எழுகின்றது. பொதுவாக நாடாளுமன்றத்துக்குள் பேசப்படுகின்ற விடயங்களுக்கு சாதாரணமாக வழக்கு தாக்கல் செய்ய முடியாது.

ஆனால் இவ்வாறு கொலை அச்சுறுத்தல் விடுப்பதுடன் இரண்டு நாடுகளுக்கு இடையேயான இராஜதந்திர உறவினை சிதைக்கின்ற செயற்பாடுகளுக்கு நிச்சயமாக சபாநாயகர் ஒரு ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்க முடியும். அந்தவகையில் சபை குறிப்புகளில் இருந்து இவர் பேசிய விடயங்களை நீக்கிவிட்டு, இவரை சபையில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும்

மேற்குறித்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் மாத்திரமே இந்த அரசாங்கம் மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படும். தற்போது இந்தியாவில் மக்கள் வீதிக்கு இறங்கி கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

கிழக்கில் வைத்து ஜனாதிபதி அநுர மக்களுக்கு அளித்த உறுதிமொழி!

கிழக்கில் வைத்து ஜனாதிபதி அநுர மக்களுக்கு அளித்த உறுதிமொழி!

மனநோயாளிகள் என்ன செய்வார்கள்

இதன்போது இலங்கை நாடாளுமன்றத்திற்குள் பேசப்பட்ட விடயம் என்றே குறிப்பிட்டு கண்டனங்களை வெளியிடுகின்றனர். இது தேசிய மக்கள் சக்தி அரசுக்கு இழுக்கினை ஏற்படுத்துகின்ற விடயம். இந்த விடயமானது தமிழ்நாட்டில் உள்ள கட்சி ஒன்றுக்கு எதிரான விடயம் மட்டுமல்லாமல் இந்தியாவின் இறையாண்மைக்கு இழுக்கான ஒரு விடயம். எனவே இனிமேல் இவ்வாறானவர்களின் வருகையை இந்திய அரசு ஏற்றுகொள்ள கூடாது.

அர்ச்சுனா எம்.பியிடம் சட்டவிரோத துப்பாக்கி - அம்பலப்படுத்தும் சட்டத்தரணி | Lawyer Exposes Illegal Gun Belongs To Aruchuna Mp

ஏனெனில் இந்த மனநோயாளிகள் என்ன செய்வார்கள் என தெரியாது. இந்த மனநோயாளிகள் அங்கே வந்து அரசியல் தலைவர்களை கொலை செய்துவிட்டால் வரலாற்று ரீதியான ஒரு அவப்பெயரை நாங்கள் பெற்றுக்கொள்ள முடியாது.

இந்தியா மட்டுமல்லாது ஏனைய நாடுகளும் இவ்வாறானவர்களுக்கு எதிர்காலத்தில் வீசாக்களை வழங்குவதில் அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் வாக்களித்த மக்கள் மீதே துப்பாக்கியை நீட்டி அச்சுறுத்தியவர் ஏனையோரை கொலை செய்வதற்கு கொஞ்சமும் அஞ்ச மாட்டார்.

எனவே இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து இலங்கை - இந்தியா உறவில் விரிசல் ஏற்படுவதை தடுக்க வேண்டும். அனர்த்தம் அல்லது பாதிப்புகள் வருகின்றபோது முன்னின்று எமக்கு உதவுகின்ற நாடாக இந்தியா காணப்படுகிறது.

குறிப்பாக தமிழ்நாட்டு மக்களும், தமிழ்நாட்டு அரசாங்கமும் பல உதவிகளை செய்து வருகின்றன. எனவே இவற்றுக்கு குந்தகம் விளைவிக்காதபடி இலங்கை நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு அவசர அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு அவசர அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020