திருகோணமலையில் களவாடப்பட்ட சட்டத்தரணியின் மோட்டார் சைக்கிள்
திருகோணமலை தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை ஜாமியா நகரில் பஜாஜ் டிஸ்கவர் EP - UU 9667 என்ற இலக்கத்தையுடைய சட்டத்தரணி ஒருவரின் மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளதாக தம்பலகாமம் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்தமோட்டார் சைக்கிள் நேற்று (08.04) இரவு இவ்வாறு களவாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவ இடத்துக்கு கந்தளாய் உதவி காவல்துறை அத்தியட்சகர் மற்றும் தடயவியல் காவல்துறையினர் சென்று விசாரனையில் ஈடுபட்டனர்.
மேலதிக விசாரணை
இந்த நிலையில் இதுகுறித்து யாருக்காவது ஏதேனும் தகவல் தெரிந்தால், தயவு செய்து உடனடியாக அறியத் தருமாறும் உரிமையாளரால் கோரப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
இதற்கு முன்னரும் ஓரிரு வாரங்களுக்குள் முள்ளிப்பொத்தானை பகுதியில் பல திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |