அநுராதபுர விவசாயிகளை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்
Sajith Premadasa
SJB
SriLanka
Rohana Bandara
Chandrani Bandara
By Chanakyan
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவின் (Sajith Premadasa) எண்ணக்கருவின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வரும் விவசாய சமூகத்தின் பிரச்சனைகளை ஆராயும் "கொவி ஹதகெஸ்ம” நிகழ்ச்சித் திட்டத்தின் மற்றொரு கட்டம் இன்றையதினம் அநுராதபுரம் நொச்சியாகம கொக்குன்னேவ பிரதேசத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கு முன், எதிர்க்கட்சித் தலைவர் நொச்சியாகம, கொக்குன்னேவவில் அமைந்துள்ள ரங்கிரி ரஜமஹா விகாரையின் விகாரையின் தலைமை அறங்காவலர் சங்கைக்குரிய மிலேவே ஸ்வர்ணபால தேரர் உட்பட மகா சங்கத்தினரிடம் ஆசி பெற்றார்.
இந்த நிகழ்வில் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார (Rohana Bandara), முன்னாள் அமைச்சர்களான சந்திராணி பண்டார (Chandrani Bandara), பி.ஹரிசன் (P. Harrison) மற்றும் மக்கள் பிரதிநிதிகள் குழுவினரும் கலந்து கொண்டனர்.












