தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை: பகிரங்கப்படுத்திய சஜித் தரப்பு
தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் தமது பொருளாதாரக் கொள்கை தொடர்பில் இதுவரை தெளிவாக வெளிப்படுத்தவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) அண்மையில் நேர்காணல் ஒன்றில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து திசைகாட்டி கொண்ட அரசாங்கம் முன்னோக்கி செல்லும் என தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார வேலைத்திட்டம்
இதேவேளை, டில்வின் சில்வா, லால்காந்த, சுனில் ஹதுன்நெத்தி, வசந்த சமரசிங்க போன்றவர்கள் சர்வதேச நாணய நிதியத்தால் கட்டியெழுப்பப்பட்ட நாடுகள் இல்லை என்றும் அவர்களுடன் பயணிக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளதாக ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பொருளாதார வேலைத்திட்டம் தொடர்பில் தங்களுக்கு குறிப்பிட்ட பொதுவான யோசனை இல்லை என்றும் தனது கட்சிக்கு ஒரு குறிப்பிட்ட வேலைத்திட்டம் இருப்பதாகவும், அதற்கு தனது மக்கள் அனைவரும் பொறுப்பு என்றும் கூறிய அவர், இதனால்தான் தேசிய மக்கள் சக்தி பொருளாதாரம் பற்றி விவாதம் செய்ய வருவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |