வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க்கட்சிகளின் தலைமைகள் திடீர் ஒன்று கூடல்! நேரலையில்.....
வடக்கைப் பிரதிநிதிதுவப்படுத்தும் தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் இன்றைய தினம் ஒன்றிணைந்து யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த சந்திப்பானது தற்போது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள யு.எஸ் ஹோட்டலில் நடைபெற்று வருகின்றது.
இதன்படி, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி. விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா, ரொலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதான், புளொட்டின் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்பின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
13 வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் முன்னெடுக்கும் பொய்ப் பிரசாரத்துக்கு எதிராகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊடகசந்திப்பின் நேரலை.
