குப்பைகளுக்கு எதிராக விழிப்புணர்வு! கீரிமலையில் மக்கள் எடுத்த நடவடிக்கை
Sri Lankan Tamils
Tamils
Jaffna
Sri Lanka
By Theepan
கீரிமலை புனித பூமியை அண்டிய பிரதேசங்களில் குப்பை கொண்டப்படுவதை நிறுத்தக்கோரி துண்டுப்பிரசுரம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை நேற்று (12-08-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கீரிமலையை அண்டிய நல்லிணக்கபுரம் மக்கள் குடியிருப்பை அங்டிய பகுதிகளில் கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாக பிரதேச சபையின் குப்பைகள் மற்றும் ஏனிய கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.
வளி மாசடைதல்
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைவதுடன் நன்னீர் மாசடைந்தல் மற்றும் வளி மாசடைதல் என்பன ஏற்படுவதனைச் சுட்டிக்காட்டி குறித்த துண்டுப் பிரசுரம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வலி. வடக்கு பிரதேசசபை மற்றும் வலிதெற்குப் பிரதேசசபை குறித்த குப்பைகளை கொட்டிவருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி