யாழ். பல்கலை விரிவுரையாளர் கொலை வழக்கு! சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று (30.04.2026) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நிலையில் நீதிவான் எஸ்.லெனின்குமாரால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி பாண்டியன் தாழ்வுப் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் வைத்து விரிவுரையாளர் தயாளினி திலீபன் படுகொலை செய்யப்பட்டார்.
மரண விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை
விரிவுரையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது 19 வயதுடைய மகள் மற்றும் 21 வயதுடைய மருமகன் ஆகிய இருவரும் திருகோணமலை பகுதியில் வைத்து காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

இதன்படி, விரிவுரையாளரின் சடலம் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற எல்லைக்குள் மீட்கப்பட்டதால், அது தொடர்பான மரண விசாரணை அறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை என யாழ். நீதிமன்ற முன்னிலையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |