கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்த வகுக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள்!

May Day Sri Lanka Ramalingam Chandrasekar
By Abi May 01, 2026 05:51 AM GMT
Report

இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம், தொழில் பாதுகாப்பு மற்றும் சமூகநலன்களை மேம்படுத்த பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தனது மே தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட இலங்கையின் தொழிலாளர் வர்க்கத்தினர் அனைவரையும் தனது வாழ்த்து செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த வாழ்த்து செய்தியில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், 

எரிபொருள் விலைத் திருத்தம் - வெளியான புதிய அறிவிப்பு

எரிபொருள் விலைத் திருத்தம் - வெளியான புதிய அறிவிப்பு

தொழிலாளர் நலனை உறுதிப்படுத்தும் நடைமுறைகள்  

இலங்கையின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க சம்பள உயர்வு, நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகத்திற்கு நீதி வழங்குவதற்கான ஆரம்பக்கட்ட படிமுறையாகும்.

கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்த வகுக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள்! | Minister Ramalingam S May Day Greetings

பாட்டாளி வர்க்கத்தின் வியர்வை, தியாகம், மற்றும் உழைப்பால் கட்டியெழுப்பப்பட்ட இந்த உலகில், தொழிலாளர்களின் நலன் குறித்து வெறும் வார்த்தைகளில் மட்டுமே பேசிக்கொண்டிருக்கவில்லை. அதனை செயல்முறையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிரூபித்து வருகின்றது.

தொழிலாளர் நலனை உறுதிப்படுத்த பல்வேறு சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளமை, வெறும் அரசியல் வாக்குறுதிகளாக அல்லாமல் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

தலைமுறைகள் கடந்தும் உழைத்த அந்த மக்களின் குரல் இறுதியில் கேட்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முயற்சிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பது இந்த அரசின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாகும்.

அதேபோல், நாட்டின் அந்நியச் செலாவணியின் முதுகெலும்பாக விளங்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், கடற்றொழிலில் ஈடுபடும் மக்களின் வாழ்க்கையும் மறக்கப்படவில்லை. கடற்றொழிலாளர்களின் குடும்பங்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சர்வதேச உழைப்பாளர் தினம் - நாடு பூராகவும் நடக்க உள்ள கூட்டங்கள்

சர்வதேச உழைப்பாளர் தினம் - நாடு பூராகவும் நடக்க உள்ள கூட்டங்கள்

ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் ஒலிக்கும் போராட்ட மேடை

இந்த ஆண்டின் மே தினம், வெறும் நினைவுநாளாக அல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் ஒலிக்கும் போராட்ட மேடையாக அமையவுள்ளது.

கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்த வகுக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள்! | Minister Ramalingam S May Day Greetings

தேசிய மக்கள் சக்தியால் நாடு முழுவதும் 21 இடங்களில் மே தினக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் வன்னி நிலப்பரப்பில் நடைபெறவுள்ள கூட்டங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.

கடந்த காலங்களில் தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக போராடியபோது, அவர்களை துப்பாக்கிச் சூடு, தடியடி, கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மூலம் ஒடுக்கியவர்கள் இன்று தொழிலாளர் நலன் குறித்து பேசுவது மிகப் பெரிய பரிகாசமாகும்.

அன்று தொழிலாளர்களின் குரலை அடக்கத் தோட்டாக்களைப் பயன்படுத்தியவர்கள், இன்று தம்மை மீட்பர்களாக காண்பிக்க முற்படுகின்றனர். இத்தகைய போலி வேடங்களுக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது.

கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்த வகுக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள்! | Minister Ramalingam S May Day Greetings

அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி, உண்மையான தொழிலாளர் விடுதலையை நோக்கி அனைவரும் ஒன்றிணைய வேண்டும். 

''உழைக்கும் மக்களின் கரங்கள் ஓங்கட்டும்! வியர்வையின் மதிப்பு உயரட்டும்! அனைத்துப் பாட்டாளி வர்க்கத்தினருக்கும் எனது செம் மேதின வாழ்த்துக்கள்'' என குறிப்பிட்டுள்ளார். 

யாழ். செம்மணியில் எலும்பு எச்சங்களுடன் நாணயம் மீட்பு: அகழ்வு நடவடிக்கை தீவிரம்

யாழ். செம்மணியில் எலும்பு எச்சங்களுடன் நாணயம் மீட்பு: அகழ்வு நடவடிக்கை தீவிரம்

யாழில் தவறாக சித்தரிக்கப்பட்ட 16 ஆசிரியைகளின் குழுப் புகைப்படம்: 5 மாணவர்கள் கைது

யாழில் தவறாக சித்தரிக்கப்பட்ட 16 ஆசிரியைகளின் குழுப் புகைப்படம்: 5 மாணவர்கள் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024