சர்வதேச உழைப்பாளர் தினம் - நாடு பூராகவும் நடக்க உள்ள கூட்டங்கள்
இலங்கையின் 21 முக்கிய நகரங்களில் 21 மே தினப் பேரணிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி (NPP) அறிவித்துள்ளது.
இன்றைய மேதின கூட்டங்கள் தொடர்பில் NPP வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1886 ஆம் ஆண்டு மே மாதம், அமெரிக்காவின் சிகாகோவில் 8 மணி நேர வேலை நாளைக் கோரிப் போராடிய தொழிலாளர்கள் குழு மீது காவல்துறை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த தொழிலாளர்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் மே 1 ஆம் திகதி சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது.
தையிட்டி விவகாரத்தில் அரசுக்கு விலை போன வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர்...! கஜேந்திரகுமார் பகிரங்கம்
மே தினப் பேரணி
அந்தவகையில் கட்சித் தலைவரும் ஜனாதிபதியுமான அநுர திசாநாயக்க, மே 1 ஆம் திகதி காலையில் நுவரெலியாவில் நடைபெறும் மே தினப் பேரணியிலும், அதனைத் தொடர்ந்து பிற்பகலில் மகாரகமவில் நடைபெறும் பேரணியிலும் கலந்துகொள்வார்.
பிரதமர் ஹரினி அமரசூரிய இரத்தினபுரியில் நடைபெறும் மே தினப் பேரணியில் கலந்துகொள்ள உள்ளார்.
கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா களுத்துறை, மாத்தறை, தங்கல்லை ஆகிய இடங்களில் நடைபெறும் பேரணிகளில் பங்கேற்பார்.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பேரணிகளில் பங்கேற்பார்.
அமைச்சர் விஜித் ஹேரத் உட்பட ஏனைய கே.டி. லால்காந்த, சுனில் ஹந்துநெத்தி, நளிந்த ஜயதிஸ்ஸ, வசந்த சமரசிங்க, அனுர கருணாதிலக, மற்றும் ஹர்ஷன நாணயக்கார ஆகியோர் நாடு முழுவதிலும் கூடுதலான இடங்களில் மே தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |