செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தகவல் : விஞ்ஞானிகள் ஆச்சரியம்
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நீர் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நாசா இன்சைட் மிஷனில் அனுப்பியிருந்த உயர் தொழில்நுட்ப கருவி ஒன்று செவ்வாய் கிரகத்தில் நடந்த விண்கல் மோதல் மற்றும் நிலநடுக்கம் பற்றிய தரவுகளை பூமிக்கு அனுப்பியிருந்தது.
செவ்வாய் கிரகத்தில் நீர்
இந்த தரவுகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தை கண்டுபிடித்திருக்கின்றனர்.
கடந்த 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் நீர் இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
அதற்கான ஆதாரங்கள் கிடைததிருக்கின்றன. ஆனால், இந்த நீர் இப்போது எங்கே போனது என்பதுதான் கேள்வி. இந்த கிரகத்தின் மின்காந்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது ஏறத்தாழ மின்காந்தமே இல்லாமல் போயிருக்கிறது.
இதனால் வளிமண்டலம் முற்றிலுமாக சிதைந்து, சூரிய ஒளி அதிகரித்திருக்கிறது. இது நீரை ஆவியாக்கியிருக்கலாம்.
அதேபோல செவ்வாய் கிரகத்தின் துருவ பகுதிகளில் நீர் ஐஸ் கட்டிகளாக இன்னமும் இருக்கிறது. இப்படித்தான் நீர் காணாமல் போயிருக்கும் என்று சொல்லப்படுகிறது.
நாசா இன்சைட்
ஆனால், விஞ்ஞானிகள் இதனை நம்பவில்லை. இவ்வளவு நீரும் ஆவியாகியிருக்காது என்று அவர்கள் கூறுகிறார்கள். அப்படியெனில் அந்த நீர் எங்கே? ஒருவேளை பூமிக்கு அடியில் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எனவே இதனை ஆய்வு செய்யதான் நாசா இன்சைட் மிஷனை செயல்படுத்தியிருந்தது.
இந்த மிஷன் மூலம் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட சூப்பர்-சென்சிட்டிவ் சீஸ்மோமீட்டர் எனும் உயர் தொழில்நுட்பம் கொண்ட கருவியானது, அந்த கிரகத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையும், விண்கல் மோதலையும் பதிவு செய்திருக்கிறது.
2021 ஆம் ஆண்டில் S1000a மற்றும் S1094b என இரண்டு விண்கல் மோதல்கள் நடந்தன. அதேபோல 2022ல் நிலநடுக்கமும் ஏற்பட்டிருக்கிறது.
இந்த தரவுகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகளுக்கு ஷாக். காரணம் நீர் இருப்பதற்கான அனைத்து சாத்திய கூறுகளும் இந்த தரவுகள் மூலம் தெரிய வந்திருக்கின்றன என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
