மோசமடையப்போகும் நெருக்கடி: எரிவாயு கப்பல் தொடர்பில் வெளியாகிய தகவல்
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Litro Gas
Litro Gas Price
By Kiruththikan
3 நாட்கள் தாமதம்
3,700 மெற்றிக் தொன் எரிவாயு கொண்ட கப்பல் நாட்டை வந்தடைய மேலும் 3 நாட்கள் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாளை (புதன்கிழமை) வருகை தரும் என எதிர்பார்த்திருந்த நிலையிலேயே தாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி எதிர்வரும் 9ஆம் திகதி கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
11 மற்றும் 16ஆம் திகதிகளில் மேலும் இரண்டு கப்பல்கள்
இதற்கு மேலதிகமாக எரிவாயு அடங்கிய மேலும் இரண்டு கப்பல்கள் எதிர்வரும் 11 மற்றும் 16 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
லிட்ரோ நிறுவனம் உலக வங்கியுடன் 100,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதுடன், அதற்கமைய, இந்த எரிவாயு கையிருப்புக்கள் இலங்கைக்கு வரவுள்ளன.
