மக்களுக்கு ஓர் மகிழ்ச்சி தகவல் - மீண்டும் 100 ரூபாவால் குறையும் லிட்ரோ எரிவாயு..!
Litro Gas
Litro Gas Price
By pavan
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
புதிய விலை மாற்றம் நாளை (03) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் சமையல் எரிவாயுவின் விலை குறையும் என அதிபரின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி