லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் குறித்து வெளியான தகவல்!
மாதாந்த விலை திருத்தத்திற்கு அமைய சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானத்தை எதிர்வரும் 5 ஆம் திகதி வெளியிடவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்திற்கான எரிவாயு விலைத்திருத்தம் தொடர்பில் ஊடகமொன்று வினவிய போது, அந்த நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன இதனைக் குறிப்பிட்டார்.
அதன்படி, புதிய விலைத்திருத்த பட்டியல் நிதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நிதி அமைச்சின் அனுமதி
இந்தநிலையில் நிதி அமைச்சின் அனுமதி கிடைத்தவுடன், புதிய விலைத் திருத்தம் அறிவிக்கப்படும் எனவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் கூறினார்.

அதுவரையில், தற்போது விற்பனை செய்யப்படும் விலையில் எந்தவித மாற்றங்களும் ஏற்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, நாட்டின் நுகர்வுக்குத் தேவையான சமையல் எரிவாயு போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 3 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
6 நாட்கள் முன்