லிட்ரோ எரிவாயு விலையில் ஏற்படப்போகும் திடீர் மாற்றம்
லிட்ரோ எரிவாயு(Litro Gas) இன் எதிர்வரும் விலை திருத்தத்தின் போது 12.5 கிலோகிராம் வீட்டு சிலிண்டரின் விலை 200 ரூபாவிற்கு மேல் அதிகரிக்கப்படும் என Litro Gas நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருவதனால் எரிவாயு விலையை அதிகரிக்க நேரிட்டதாக தெரிவித்த அதிகாரி, லிட்ரோ காஸ் நுகர்வோர் பாதிக்கப்படாத வகையில் தற்போது எரிவாயு விலையை உயர்த்த பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
லிட்டர் எரிவாயு விலை சூத்திரத்தின்படி, அடுத்த எரிவாயு விலை திருத்தம் நவம்பர் 5 நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
தற்போதைய விலை
லிட்ரோ நிறுவனம் இம்மாதம் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 343 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இந்த அதிகரிப்புடன் 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 3,470 ரூபாவாக அதிகரித்துள்ளது.