டொலர் நெருக்கடி - சிறிலங்கா காவல்துறை குதிரைகளுக்கு ஏற்பட்ட நிலை
டொலர் நெருக்கடி காரணமாக சிறிலங்கா காவல்துறை குதிரைப்படை பிரிவுக்கு சொந்தமான குதிரைகளுக்கு உள்ளூர் உணவு வழங்கும் வேலைத்திட்டம் வெற்றியளித்துள்ளதாக பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்த குதிரைகளுக்கான உணவுகளை இறக்குமதி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், உள்ளூர் உணவு வழங்கும் திட்டத்தை காவல்துறை குதிரைப்படை பிரிவு ஆரம்பித்துள்ளது.
உள்ளூர் உணவு வழங்கும் திட்டம்

அதன்படி, கடந்த மூன்று மாதங்களாக குதிரைகளுக்கு நாட்டுத் தீவனங்களான கௌபீஸ், பட்டாணி, பச்சைப்பயறு, சோளம் போன்றவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதிகரிக்கும் எடை

அதன்படி, இந்தக் குதிரைகளின் எடை படிப்படியாக அதிகரித்து வருவதாக காவல்துறை குதிரையேற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பற்றாக்குறையினால், கடந்த காலங்களில் இந்தக் குதிரைகளின் எடை படிப்படியாகக் குறைந்து, மெலிந்து போகத் தொடங்கியதாக குதிரையேற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.