உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெளிநாட்டு பார்வையாளர்கள் : வெளியான அறிவிப்பு
Election Commission of Sri Lanka
Local government Election
By Jaso
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று தேர்தல்கள் ஆணையாளர் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகக் கருதப்படாததால், வெளிநாட்டு தேர்தல் பார்வையாளர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
தேர்தல் ஆணையத்தின் அழைப்பின் பேரில் வந்த கண்காணிப்பாளர்கள்
முந்தைய ஜனாதிபதித் தேர்தலின் போது ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல்வேறு வெளிநாட்டு கண்காணிப்புக் குழுக்கள் இந்த நாட்டில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. தேர்தல் ஆணையத்தின் அழைப்பின் பேரில் சில வெளிநாட்டு கண்காணிப்பு அமைப்புகள் வந்தன.

இதேவேளை எதிர்வரும் 06 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி