இந்துக்களின் புனித விரதநாளில் முருகப்பெருமானை கிளப்பிச்சென்ற திருடர்கள் (படங்கள் இணைப்பு)
basarai
lord murugan
looted
By Sumithiran
இந்துக்களின் புனித விரதமான கந்தசஷ்டி தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் அந்த விரதத்திற்குரிய தெய்வமான முருகனை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் திருடர்கள்.
பதுளை − பசறை − கோணக்கலை காவத்தை தோட்டத்தில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த பெறுமதி வாய்ந்த வள்ளி, தெய்வானை சகிதம் சமேதரராய் அமைந்த முருகன் சிலையே கொள்ளையிடப்பட்டுள்ளது.
இனந்தெரியாத நபர்களால் நேற்றைய தினம் ஆலய கதவு உடைக்கப்பட்டு, இந்த சிலை கொள்ளையிடப்பட்டுள்ளது. ஆலய கதவு திறக்கப்பட்டிருந்த நிலையில் சிலை காணாமல் இருப்பதை அறிந்த பிரதேச மக்கள் பசறை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பசறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.


