முதல் நாளே அபார வெற்றியை பெற்றுக்கொண்ட ஜப்னா கிங்ஸ்!
தற்போது ஆரம்பமாகியுள்ள நான்காவது எல்.பி.எல் தொடரின் இன்றைய முதலாவது போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 21 ஓட்டங்களால் அபாரவெற்றி பெற்றுள்ளது.
இன்று ஆரம்பமாகிய இந்த தொடரில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணியும் ஜப்னா கிங்ஸ் அணியும் மோதிக்கொண்டன.
அந்த வகையில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
ஜப்னா கிங்ஸ் அணி சார்பில் டவ்ஹித் ஹ்ரிடோய் 39 பந்துகளில் 54 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
கொழும்பு அணி

கொழும்பு அணி சார்பில் மதீஷ பத்திரன ஒரு விக்கெட்டினை வீழ்த்தியிருந்தார்.
இதன் மூலம் கொழும்பு அணிக்கு 174 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து துப்பெடுத்தாட களமிறங்கிய கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 19.4 ஓவர்கள் முடிவில் 152 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்த நிலையில் ஜப்னா கிங்ஸ் அணி 4ஆவது எல்.பி.எல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.