கல்வி நடவடிக்கைகளை ஆதரித்த தலைவர் பிரபாகரன்: கல்வி அமைச்சர் பெருமிதம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்(Velupillai Prabhakaran) ஒருபோதும் பாடசாலையை மூடுவதற்கு இடமளிக்கவில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த(Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொடர்பான மாணவர் சங்க வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக அலரி மாளிகையில் இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “சிலர் பாடசாலைகளை மூடிவிட்டு தொழில் உரிமைகளை கோரி போராட்டங்களை முன்னெடுத்து வந்தாலும், பல வருடங்களாக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒருபோதும் பாடசாலையை மூடுவதற்கு இடமளிக்கவில்லை.
தொழில் உரிமை
பிரபாகரன் எந்தப் பரீட்சைக்கும் இடையூறு செய்யவில்லை. தொழிற்சங்கங்கள் அதற்கு அப்பால் சென்று எதிர்கால சந்ததியினரை அடகு வைத்து தொழில் உரிமைகளை வென்றெடுக்க முயற்சிக்கின்றது.
தொழில்முறை உரிமைகளை வென்றெடுப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் எதிர்கால சந்ததியினர் தொழில்முறை உரிமைகளை வென்றெடுப்பதை அனுமதிக்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |