“விடுதலைப் புலிகளின் ஆட்சி இருந்திருந்தால்........ இந்த அரசாங்கம் வடக்கு, கிழக்கை பதிலீடு செய்திருக்கும்” விஜித் விஜயமுனி சொய்சா
தற்போது விடுதலைப் புலிகளின் தலைவரது ஆட்சி இருந்திருந்தால் டொலரை வழங்குமாறு அவரிடமும் இந்த அரசாங்கம் கோரியிருக்கும் என்கிறார் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான விஜித் விஜயமுனி சொய்சா (Vijith Vijayamuni Soysa).
நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், அதற்கு பதிலீடாக வடக்கு, கிழக்கை கையளித்திருக்கும். ஏனெனில் இன்று நாட்டிலுள்ள பெறுமதியான வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டு வருகின்றன" என கூறியுள்ளார்.
மேலும் கருத்து வௌியிட்டுள்ள அவர்,
"நாட்டின் பொருளாதாரம் படு வீழ்ச்சிக்குச் சென்றுள்ளது. பிறந்துள்ள புதிய ஆண்டில் இந்த அரசு ஆட்டம் காண்பது உறுதி.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவால், வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை. அவரால் சுயமாகச் சிந்தித்துச் செயற்படவும் முடியவில்லை.
நாட்டில் இன்று பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. மக்களுக்கும் கடும் நெருக்கடி. உணவின்றி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஊழல், மோசடிகளும், முறையற்ற அபிவிருத்திகளுமே நெருக்கடி நிலைமைக்குக் காரணம்'' என அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
5 நாட்கள் முன்